Jose Charles Martin | 10, +2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - LJK கட்சி அசத்தல்
10, +2 மாணவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி ஊக்கத்தொகை. புதுச்சேரியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய ஜோஸ் சார்லஸ் மார்டின், அனைவரும் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று வாழ்த்தினார்.