திருப்பரங்குன்றத்தில் போராட்டம் - பாஜகவினர் உள்பட 62 பேர் மீது வழக்கு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் உள்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், மாரி சக்கரவர்த்தி உள்பட 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.