திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Update: 2025-12-22 08:35 GMT

அருகே திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு அருகே திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொன்பதர்கூடம் கொல்லமேட்டை சேர்ந்த சரவணனுக்கும், இந்திராவுக்கும் 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மாமியார் மீனாட்சி, இந்திராவிற்கு குழந்தை பிறக்காததை சுட்டிக்காட்டி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா, இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்