முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2019-10-04 11:32 GMT
முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகள் அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண் கே.ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக உள்ள நிலையில், பெரியாறு பிரதான மற்றும் பேபி அணை, கேலரி மற்றும் மதகுப் பகுதி, மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம், கசிவு நீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான அறிக்கை நாளை மூவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்