சிவகங்கை : பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உக்ர பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில், மழை வேண்டி 108 கலசாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2019-07-07 06:44 GMT
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உக்ர பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில், மழை வேண்டி 108 கலசாபிஷேக விழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற, கோவிலின் 12ஆவது ஆண்டு மகா யாக விழாவின் முக்கிய நிகழ்வாக கலசாபிஷேகம் நடைபெற்றது. 108 ஹோம பொருட்கள், 108 பழ வகைகள், 108 இனிப்பு பழகாரங்கள், பட்டு சேலைகள், திருமாங்கல்யம் ஆகியவை கொண்டு யாகம் நடத்தப்பட்டது.பின்னர் அம்மனுக்கு கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்