குடிநீருக்காக 4 கி.மீ., தூரம் நடக்கும் மக்கள் : சகதி கலந்த நீர் தான் கிடைப்பதாக வேதனை

கடலூர் அருகே விலங்கல் பட்டு கிராமத்தில் குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

Update: 2019-06-19 15:39 GMT
கடலூர் அருகே விலங்கல் பட்டு கிராமத்தில் குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. விலங்கல்பட்டு கிராமத்தில், கடந்த 6 மாதமாக குடிநீர் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளம் வெட்டி தண்ணீர் எடுக்கின்றனர். ஆனால் அந்த தண்ணீரும் சகதி கலந்து வருவதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராமமக்கள், தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரவு தீர்வு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்