சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-22 08:07 GMT
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவிரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் குழாயை ஒப்பந்ததாரர் அடைத்துவிட்டதாக புகார் கூறிய அவர்கள், இதனால் கடந்த 2 மாதங்களாக குடிநீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர். மேலும், வசதிபடைத்தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்