திருப்பரங்குன்றம் இடைதேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.;

Update: 2019-05-15 10:27 GMT
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதாகவும்,  பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பணம் கொடுத்து கட்சிகள் மக்களை அழைத்துச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். குறிப்பாக அதிமுக, திமுக, அம்மா முன்னேற்றக் கழகம், ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறி அதை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்