உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Update: 2019-04-22 08:11 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி, வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தேர்தல் நடத்துவது தொடர்பாக இதுவரை அறிவிப்பு வெளியிடப்படாததால், உள்ளாட்சி நிர்வாகம், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என அதில் குற்றம்சாட்டிப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே, மேலும், 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்