ISRO Narayanan | Tirupati | திருப்பதியில் வைத்து இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

Update: 2025-12-22 06:13 GMT

 டிச.24-ல் அமெரிக்க செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

எல்.வி.எம். ராக்கெட் மூலம் அமெரிக்காவுக்கு சொந்தமான செயற்கைகோள் நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026-இல் இஸ்ரோவிடம் நிறைய விண்வெளி திட்டங்கள் இருப்பதாக கூறிய நாராயணன், தனியார் நிறுவனங்கள் பங்களிப்போடு ராக்கெட் தயாரிக்கும் திட்டம் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்