என்ஜின் கோளாறு - பழனியில் நின்ற பயணிகள் ரயில் : 3 மணி நேரமாக நிற்பதால், பயணிகள் அவதி

என்ஜின் கோளாறு காரணமாக, திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

Update: 2019-03-25 08:07 GMT
என்ஜின் கோளாறு காரணமாக, திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் ரயில் தினமும் காலை 7.30 மணிக்கு பழனிக்கு வந்து செல்லும். இன்று காலை வழக்கம்போல் பழனிக்கு வந்த அந்த ரயில், என்ஜின் கோளாறு காரணமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மாற்று என்ஜின் வந்த பின்னரே ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், கோவை பயணிகள் ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில் ஆகியவை தாமதமாக செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்