பொள்ளாச்சி : போலீசார் அருகே வெடி வைத்த அதிமுகவினர்

பொள்ளாச்சி காந்தி சாலை முன்பு வேட்பாளரை வரவேற்பதற்காக அதிமுகவினர் வைத்த பட்டாசு புகையால் போக்குவரத்து போலீசார் அவதிக்குள்ளாகினர்.

Update: 2019-03-23 10:47 GMT
பொள்ளாச்சி காந்தி சாலை முன்பு வேட்பாளரை வரவேற்பதற்காக அதிமுகவினர் வைத்த பட்டாசு புகையால் போக்குவரத்து போலீசார் அவதிக்குள்ளாகினர். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் வருகையை ஒட்டி அக்கட்சி தொண்டர்கள், சாலையில் வெடி வெடித்து வரவேற்றனர். போக்குவரத்து போலீசாருக்கு மிக அருகே வெடி வைக்கப்பட்டதால், போக்குவரத்து சீரமைக்கும் கூண்டுக்குள் நின்ற போலீசார், அங்கிருந்து நகர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலையும் புகை மண்டலமாக காட்சியளித்த‌தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 
Tags:    

மேலும் செய்திகள்