நாடாளுமன்ற தேர்தலோடு அ.ம.மு.கவிற்கு மூடுவிழா - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

அமமுகவிற்கு மூடுவிழா நடத்தி அதிமுகவிற்கு திரும்பி விடுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்;

Update: 2019-03-23 05:51 GMT
நாடாளுமன்ற தேர்தலோடு அமமுகவிற்கு மூடுவிழா நடத்தி, அனைவரும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பி விடுவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அமமுகவும் கமலும் இல்லை எனவும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே தான் போட்டி எனவும் குறிப்பிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்