சங்ககிரி குறித்த ஆவணப்பாடல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா

சேலம் சங்ககிரியில் அந்த ஊர் குறித்து படமாக்கப்பட்ட ஆவணப் பாடல் வெளியீட்டு விழா, சங்ககிரி மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ஏ.பி நாகராஜனின் புகழைப் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2019-03-19 05:57 GMT
சேலம் சங்ககிரியில் அந்த ஊர் குறித்து படமாக்கப்பட்ட ஆவணப் பாடல் வெளியீட்டு விழா, சங்ககிரி மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ஏ.பி நாகராஜனின் புகழைப் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், வெங்காயம் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். சங்ககிரியில் பிறந்து உலக அளவில் செஸ் போட்டிகளில் பல்வேறு பரிசுகளை பெற்ற நந்திதா, கின்னஸ் சாதனை முயற்சியாக தொடர்ந்து 24 மணி நேரம் பேசிய விக்னேஷ் மற்றும் இந்தியாவின் முதல் பெண் லாரி ஓட்டுநர் என்ற சாதனையை படைத்த பெண் செல்வமணி உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்