விளை நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகள் : உடனடியாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோட்டில் விளை நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Update: 2019-03-15 11:34 GMT
ஈரோட்டில் விளை நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும்  விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் சிறுவர்கள் மது அருந்துவதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தினால் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு  110 கடைகள் விளை நிலங்களில்  அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், 3,000 டாஸ்மாக் கடைகளில்  சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனுமதி இன்றி விளை நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்