ஆவணங்கள் இல்லாத ரூ. 1,47,400 பறிமுதல் : தேர்தல் கண்காணிப்புக்குழு சோதனையில் சிக்கியது

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-15 02:52 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பிரிவு சாலையில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர், அந்த வழியாக வந்த ஆம்னி காரை மடக்கினர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆவணங்கள் இல்லாத ரூ.1.40 லட்சம் பறிமுதல் : 12500 சுவரொட்டிகள், ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றம்



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த ஆட்சியர் வீரராகவ ராவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதைக் கூறினார். 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பிளக்ஸ் தட்டிகள் அகற்றப்பட்டு, அது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்