சட்டவிரோத மணல் கடத்தல் : மூவர் கைது - வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு லாரி, ஒரு ஜே.சி.பி வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான ஐந்து பேரை தேடிவருகின்றனர்.