கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மலர்கள் அருகே நின்று பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.