Theft | CRIME வலையில் சிக்கிய சென்னை பெண் பறிபோன 10 பவுன்.. வாயில் வடை சுட்டு விபூதி அடித்த திருடன்
தோஷம் கழிப்பதாக இளம்பெண்ணிடம் 10 பவுன் நகைகள் திருட்டு - அதிர்ச்சி
சென்னை சவுகார்பேட்டையில் தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணிடம் 10 பவுன் நகைகளை திருடர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுகார்பேட்டை மின்ட் தெருவைச் சேர்ந்த இளம்பெண் தீபக்ஜெயின்... இவர், ஜெயின் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அங்கு வந்த 2 பேர், தீபக்ஜெயினுக்கு தோஷம் இருப்பதாக கூறி, மந்திரம் சொல்வதுபோல் அவர் மீது விபூதிபோன்ற பொருளை தூவியுள்ளனர். இதனால் அவர் லேசாக மயக்கம் அடைந்த நிலையில், அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க வளையல்களை கழற்றி ஹேன்ட்பேக்கில் வைக்குமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர். தீபக்ஜெயின் வளையல்களை ஹேன்ட்பேக்கில் வைத்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேன்ட்பேக் உடன் வளையல்களை திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தீபக்ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார்