கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இதில் மைக்கேல், மதலை முத்து உள்ளிட்டோரின் வீடுகளிலிருந்த 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் கைரேகை மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.