ராமதாஸ் பொதுக்குழு... "அனுமதி தரவேண்டாம்"- அன்புமணி தரப்பு பரபரப்பு கடிதம்

Update: 2025-12-25 13:08 GMT

ராமதாஸ் பொதுக்குழு... "அனுமதி தரவேண்டாம்"- அன்புமணி தரப்பு பரபரப்பு கடிதம்

சேலத்தில் ராமதாஸ் தரப்பின் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என அன்புமணி தரப்பினர் காவல்துறைக்கு கடிதம் வழங்கியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 29ஆம் தேதி பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் பாமக பொதுக்குழுவை கூட்டுவதற்கு கட்சியின் தலைவரான அன்புமணிக்கே உரிமையுள்ளது என்றும் வேறு யாரேனும் அனுமதி கேட்டால் வழங்கவேண்டாம் என்றும் அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்