விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி

x

பனையூரில் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தவெக பெண் நிர்வாகி அஜிதா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கவில்லை என கூறி விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய அஜிதா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அஜிதா 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்