வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...

சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

Update: 2019-01-11 11:17 GMT
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜெரால்ட், ஜெசி மற்றும் கனா, பியனி என்ற வயதான  தம்பதிகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து வீடு போன்ற கட்டமைப்பில்  தயாரிக்கப்பட்ட இரண்டு சொகுசு வேன்களை எடுத்துக்கொண்டு பிரான்சில் இருந்து புறப்பட்ட அவர்கள், இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளனர். தற்போது ராமேஸ்வரம் சென்றுள்ள பிரான்ஸ் தம்பதிகள், கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். 15 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து விட்டதாகவும், இன்னும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தரை வழியிலேயே பயணிக்க உள்ளதாகவும் அந்த தம்பதிகள் கூறியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் சொகுசு பேருந்தை ஆர்வமாக பார்க்கும் உள்ளூர் மக்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்