காட்டு முயல்களை வேட்டையாடியதற்கு ரூ.80,000 அபராதம்

சேலம் மாவட்டம்,மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு முயல்களை வேட்டையாடிய 4பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Update: 2018-12-31 02:15 GMT
சேலம் மாவட்டம்,மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு முயல்களை வேட்டையாடிய 4பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு முயல்களை பிடித்து, சங்ககிரி பகுதிகளில் உள்ள தாபா,  ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து , மேட்டூர் வனச் சரக அலுவலர் பிரகாஷ்   தலைமையிலான குழு  சங்ககிரி - குப்பனூர் பைபாஸ்  சாலையில் உள்ள தாபா ஹோட்டல்களில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது  பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் காட்டு  முயல்களை வேட்டையாடியது தொடர்பாக  4  பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்த 5 காட்டு முயல்களையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்