மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.;
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அருகே செல்லம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் அவரது மனைவி கோமதிக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, தனது மனைவி கோமதியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அதில், சம்பவ இடத்திலேயே கோமதி உயிரிழந்தார். தடுக்கச் சென்ற கோமதியின் தாயாரையும் கத்தியால் மூர்த்தி குத்தியுள்ளார். இது தொடர்பாக, மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.