ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி
விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.;
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என தெரிவித்தார்.