இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி : நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு...

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோடியக்கரையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரவு பகல் பாராமல் முழுவீச்சில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Update: 2018-11-18 09:50 GMT
கோடியக்கரை வனப்பகுதயில் கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருந்ததையடுத்து, சாலையெங்கும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனையடுத்து அப்பகுதியில் 25 வீரர்களை கொண்ட நான்கு பேரிடர் மீட்பு குழு, நிவாரணப்பணிகளை செய்து வருகிறது. நாள் ஒன்று இரண்டு மணி நேரமே ஓய்வெடுக்கும் அவர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் பணிகளை வேகமாக செய்யமுடிவதாகவும் தெரிவித்துள்ளனர். வேரோடு  விழுந்துள்ள மரங்களை அகற்றுவது சவாலான வேலையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்