மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-13 02:07 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளவும், மணல் குவாரி நடத்தவும் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 13ம்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடை இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று ஆற்றுப் பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள், அரசு பணிகள், மற்றும் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க அரசு ஆலோசித்து வருவதாக மாவட்ட பொன்னையா சூசகமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்