சிறுமி ராஜலட்சுமியை கொலை செய்த நபர் மீது கடும் நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமி ராஜலட்சுமியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமி ராஜலட்சுமியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆணையத்தின் துணை தலைவர் முருகன், ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு, முதல் தவணையாக 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முருகன் தெரிவித்தார்.