ஓராண்டுக்கு முன்பு சாய்ந்த ஆலமரம் திடீரென நிமிர்ந்ததால் பரபரப்பு

ஓராண்டுக்கு முன்பு சாய்ந்த ஆலமரம், திடீரென எழுந்ததால், மரத்தை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

Update: 2018-10-08 13:26 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த பாவூர் கிராமத்தில், பச்சையம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயிலின் பின் புறத்தில் 25 ஆண்டு பழமையான ஆலமரம் இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் வேரோடு சாய்ந்த இந்த மரத்தின் கிளைகளை வெட்டி விற்பனை செய்துள்ளனர். அடி மரம் மட்டும் வேருடன் இருந்த நிலையில் திடீரென அந்த ஆலமரம் எழுந்துள்ளது . இதையடுத்து, மரத்துக்கு சக்தி உள்ளதாக கருதி மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்