தமிழகம் முழுவதும் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-10-08 12:04 GMT
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில், மகாளய அமாவாசையொட்டி, மூதாதையர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சிலர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். கும்பகோணத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் மகாமகக் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். பிண்டங்களை குளத்தில் கரைத்த பின்னர், சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை ஜயங்குளத்தின் கரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். எள் தர்பணம்  கொடுத்து, இறந்த முன்னோர்களின் ஆசி பெற வழிபட்டனர்.  புதுச்சேரி காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரை  வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, திருக்காஞ்சி, உள்ளிட்ட பல இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பசுக்களுக்கு அகத்திகீரை வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்