கனமழை எதிரொலி : 60 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-10-07 07:30 GMT
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை  பெய்துவருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக வைகை அணை 60 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விரைவில் வைகை அணை முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை :

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணையின் உட்பகுதியில் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகாய கங்கை அருவியில் குளிக்க தடை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்