பெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ

பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.

Update: 2018-10-05 04:22 GMT
தேனி மாவட்டம்  காமயக் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுகுமாறன். 43 வயதான இவர் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகு சூரிய சக்தி  மின்சாரம் சார்ந்த துறைகளில் ஆர்வம் காட்டி வந்த இவர் தற்போது அந்த முறையில் இயங்கும் ஆட்டோ ஒன்றை உருவாக்கி இருக்கிறார். 

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சூரிய சக்தி   முறையில் இயக்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறார் சுகுமாறன் . விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆட்டோவை உருவாக்கியதாக விளக்கமும் அளித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்