தென்காசி மாவட்டம் புளியங்குடியில், ஆசிரியர் தாக்கியதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.புதுக்குடியில் வேல்முருகன் என்பவரின் மகன் அபிலேஷ், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் யூனிஃபார்ம் சரியில்லை என்று கூறி அபிலேஷை தாக்கியதுடன், வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிக மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்ற அபிலேஷ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.