ஒடிசா மாநிலம் சமர்தர்பல்லி விமான ஓடுதளம் தேர்வு அறையாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. மேலும் 187 பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதால், தேர்வு அறைக்கு பதிலாக சமர்தர்பல்லி விமான ஓடுதளத்தில் தேர்வு நடத்தப்பட்டது.