ககன்யான் திட்ட விண்கலம் தரையிரங்கும்
சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிரங்குவதை உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டது.
விண்கலம் பூமியை நோக்கி இறங்கும்போது அதில் இணைக்கப்பட்டுள்ள 10 பாராசூட்கள், அடுத்தடுத்து விரிவடைந்து விண்கலத்தின் வேகத்தை சீராக குறைக்க உதவுகிறது. பாராசூட்டுகளின் உறுதித்தன்மைக்காக நடத்தப்பட்ட இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.