துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை.. துவைத்து துவம்சம் செய்த பொதுமக்கள்..
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயுன் பகுதியில் நகைக்கடையில்
புகுந்து துப்பாக்கி முனையில் பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்ப முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் கொள்ளையன் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து பொதுமக்கள் கொள்ளையர்களை போலீசில் ஒப்படைத்தனர்.