குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு

குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது

Update: 2018-09-08 05:25 GMT
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய இரு முக்கிய அமைப்புகளின் 
சோதனையை தொடர்ந்து, அமலாக்கப்பிரிவும் களத்தில் குதித்துள்ளது. 
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தங்கு தடையின்றி விற்பனை செய்ய 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது . இதுதொடர்பாக  சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முறைகேடு நிகழ்ந்தது உண்மை என ஒப்புக் கொண்டிருந்தார். அப்போது, ஜார்ஜ் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளது. எனவே, குட்கா விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை உருவாக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்