கட்டாய ஹெல்மெட் - கோவையில் 2,500 வழக்குகள் பதிவு
பதிவு: ஆகஸ்ட் 31, 2018, 10:46 AM
கோவையில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து சென்றதாக 2 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறும் நபரின் புகைப்படம் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, அவரது வாகன விபரங்கள் உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.