எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

Update: 2018-08-23 06:57 GMT
சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் செங்கல்லை எடுத்து வைத்து, பூமி பூஜை செய்தனர். மூத்த அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த வளைவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்