மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்

ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.;

Update: 2018-08-02 11:42 GMT
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.

உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். 

கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். 

அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி  மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
Tags:    

மேலும் செய்திகள்