"சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2018-07-16 11:48 GMT
அடுத்த ஆண்டு முதல் ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், தமிழ் வினாத் தாளுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்