அடகு வைத்த காரை மீட்க கள்ள நோட்டுகள்
பதிவு: ஜூலை 10, 2018, 07:08 PM
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் பாலசுப்பிரமணியம் என்பவரிடம், ராஜேஷ் என்பவர் காரை அடமானம் வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். பாலசுப்பிரமணியின் தம்பி வேல்முருகனிடம் கடந்த வாரம் பணத்தை திருப்பி கொடுத்து காரை எடுத்துச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் பணத்தை எண்ணிப் பார்த்த வேல்முருகன், இரண்டு ஆயிரம் ரூபாய் பணக்கட்டில் முதல் மற்றும் கடைசி நோட்டுகளை தவிர மீதமுள்ள  ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கான நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக  ராஜேசை தொடர்பு கொண்ட போது,  நல்ல நோட்டுகளை தந்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை திருப்பி அளிக்காததால், திருமங்கலம் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில்,  ராஜேஷ் மீது கள்ளநோட்டு தயாரித்தல், விநியோகித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.