"இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்" - துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார்

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் என துணை முதல்வரும், மீன்வளத்துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்

Update: 2018-07-06 01:35 GMT
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம், விரைவில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார், 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். 

மேலும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு அம்சங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரிலே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வரும் திங்களன்று லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வரப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்