இந்தியா - இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து வெற்றி பெற 291 ரன்கள் தேவை

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 02:13 GMT
 லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சில் 99 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்த‌து. அதிகபட்சமாக ரோகித்ஷர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும், ஷர்துல் தாகூர் 60 ரன்களும் எடுத்தனர். 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 291 ரன்கள் தேவைப்படும் நிலையில் கடைசிநாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்