மீராபாய் சானுவின் வெற்றிப் பயணம்- விறகு சுமந்தவர், பதக்கம் வென்ற வரலாறு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்துள்ளார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு...

Update: 2021-07-25 02:13 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்துள்ளார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சரிக்கும் பெயர் இதுதான்...
காரணம்... இரு தசாப்தங்கள் கழித்து பளுதூக்குதலில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் சானு...வடகிழக்கு இந்தியாவின்  கடைக்கோடி மாநிலம் மணிப்பூர். அங்குள்ள குக்கிராமத்தில் பிறந்தவர்தான் சாய்கோம் மீராபாய் சானு. ஏழ்மையான குடும்பத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் சானு வளர்ந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்புகளுக்கு, வறுமை முட்டுக்கட்டையாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிந்தோடி விளையாடும் பருவத்தில் விறகுகளை சுமந்து கொண்டிருந்தவர் சானு.ஆம், குடும்ப சூழலால் தனது சகோதரருடன் காடுகளில் விறகுகளை சேகரித்து, அதனை தலையில் சுமந்து வருவதை சானு வாடிக்கையாக வைத்திருந்தார். இவ்வாறு, கரடுமுரடான பாதைகளில் பயணித்த சானுவிற்கு, பளுதூக்குதலில் பற்று ஏற்படக் காரணம், மணிப்பூரை சேர்ந்த முன்னாள் பளுதூக்குதல் வீராங்கனை குஞ்சராணி தேவி. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட குஞ்சராணி தேவிதான் சானுவின் ஆஸ்தான குரு.அவரைப் பார்த்து, பளுதூக்குதலில் பற்று கொண்ட சானு, அதனை வீட்டில் வெளிப்படுத்தினார்.
ஆனால், வறுமையின் சதியால், வேண்டாம் என்பதே குடும்பத்தினரின் பதிலாக வந்தது. இருப்பினும் பல்வேறு தடைகளைக் கடந்து, பின்னாளில் குஞ்சராணி தேவியிடமே பளுதூக்குதல் பயிற்சி பெற்றார் சானு.அசாத்திய திறமையால்  மாவட்டம், மாநிலம், தேசியம் என படிப்படியாக பளுதூக்குதலில் சானு முன்னேறினார். கடந்த 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தான், சானுவின் பக்கம் புகழ் வெளிச்சத்தை பாய்ச்சியது. அதில் வெள்ளிப்பதக்கம் வென்று, 2016 ஒலிம்பிக்கிற்கும் அவர் தகுதி பெற்ற நிலையில், ரியோ ஒலிம்பிக் சானுவுக்கு  ஏமாற்றத்தையே பரிசாக அளித்தது. 2016 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் சோபிக்கத் தவறிய நிலையில், Did not finish அதாவது, போட்டியை முடிக்காதவர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. இதனால், களத்திலேயே கண்ணீர் சிந்தினார் சானு... 
Tags:    

மேலும் செய்திகள்