பிரெஞ்சு ஓபன் - ரோஜர் ஃபெடரர் விலகல்

2021ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார்.

Update: 2021-06-07 02:19 GMT
2021ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார். இந்தாண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ரோஜர் ஃபெடரர், மூட்டுவலி பிரச்சினை காரணமாக போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இரண்டு மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின் திரும்ப வந்துள்ள நிலையில், உடல் நலனை கருத்தில் கொள்வது முக்கியம் என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்