சென்னை அணியின் "கடைக்குட்டி சிங்கம்" சாம் கரண் - இரண்டே ஆட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த சாம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2 ஆட்டங்களில் கலக்கி வரும் இளம் வீரர் சாம் கரண் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..

Update: 2020-09-24 12:16 GMT
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் 22 வயதான சாம் கரண் - நார்தாம்ப்டன் நகரில் பிறந்தவர். இவரின் தந்தை கெவின் கரண் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்.. தந்தையிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்ற சாம் கரண் தனது14 வயதில் ஜூனியர் சர்ரே அணிக்காக விளையாடினார்.. முதல் தர கிரிக்கெட்டில் கலக்கவே சாம் கரணுக்கு இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

2018ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட சாம் கரண் , படிப்படியாக உயர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்காக 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். 

2018ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் , சாம் கரணை பஞ்சாப் அணி 7 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய சாம் கரண் 95 எடுத்து , 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான மோதலில் சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட் வீழத்தி , இளம் வயதில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்..

அந்த தருணத்தை நினைவில் வைத்திருந்த சென்னை நிர்வாகம் , 2019 ஐபிஎல் ஏலத்தில் அவரை 5 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

இந்நிலையில் மும்பைக்கு எதிரான மோதலில் , யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்களை திரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான மோதலில் முன்னணி பந்து வீச்சாளர்கள் திணற சாம் கரண் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அல்பி மோர்க்கல் போலவே , பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சாம் கரண் கலக்குவதால் சென்னை ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்