சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-01-08 19:29 GMT
சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா  மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 521 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார். 

இதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற FAROOK ENGINEER என்ற சாதனையை அவர் சமன் செய்தார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜடேஜா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்