புதிய கட்சி தொடங்கும் அமரிந்தர் சிங் - அறிவிப்பு வெளியீடு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-10-27 09:51 GMT
காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு, தன்னுடைய தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றார். சித்து பஞ்சாபில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவதாய்த் தெரிவித்த அமரிந்தர் சிங், 117 தொகுதிகளிலும் தமது புதிய கட்சி போட்டி இடும் என்று கூறியுள்ளார். மேலும், மக்களுக்கு அளித்த 92 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக  தெரிவித்த அவர், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரித்த மத்திய அரசின் நடவடிக்கை சரியே என்று தெரிவித்தார். அத்துடன், 3 வேளாண் சட்டங்கள் குறித்து நாளைய தினம் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்